நூல் அறிமுகம் :: ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை.
ஆசிரியர் அறிமுகம்: பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பு முழுவதும் தமிழ் வழியில் படித்த ஒருவர் ஐஏஎஸ் ஆக முடியுமா? ஒரு வேளை முயற்சி செய்தால் ஆகலாம். ஆனால், அந்த ஐஏஎஸ் -யும் தமிழிலேயே எழுதி தேர்ச்சி பெற முடியுமா? ஆம், இவையெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே நடந்தது என்றால் நம்ப முடியுமா!!! இதையெல்லாம் 2019 ஆண்டு போட்டித்தேர்வுக்குப் படிக்கும்போது ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் "மலை இடப்பெயர்வுகள்: ஓர் ஆய்வு" என்னும் பாடப்பகுதியில் நான் படித்து வியந்தது. இத்தகைய சாதனைக்கெல்லாம் உரியவர் சிந்துவெளி மற்றும் சங்க இலக்கிய ஆய்வாளரான ஐயா, ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களே. அன்று முதல் ஐயாவை முகநூலிலும் யூட்யூபிலும் பின் தொடர்ந்து வருகிறேன். 2019 ஆண்டு இறுதியில் Journey of Civilization: Indus to Vaigai என்னும் இந்நூலின் மூல வடிவம் வெளியானது. தமிழில் வெளிவந்தால் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதேபோல் தமிழிலும் முதல்வரின் கையால் ...